பேரும் புகழும் கொண்ட மதுரை சுங்குடி சேலைகள்
மதுரை சுங்குடி சேலைகள், பாரம்பரியம் மற்றும் அழகிய நுட்பத்தின் சங்கமமாக விளங்குகின்றன. இச்சேலைகள் முதலில் இயந்திரத்தரியில் நெய்யப்பட்டு வெளிவருகின்றன. பின்னர் அவை வெண்மைப் புடவைகளாக சாயம் பூசப்பட்டு, தேவையான அடிப்படை வண்ணங்களால் நிறமூட்டப்படுகின்றன. அதன் பிறகு பாடர்களுக்கேற்ப மாற்று நிறங்களால் மேலும் அழகுபடுத்தப்படுகிறது.
சாயம் பூசப்பட்ட பிளைன் சேலைகளை ஸ்கிரீன் அச்சுகள் தயாரித்து, விரித்து வைத்து தேவையான வண்ணங்களில் அலங்கரிக்கின்றனர். இந்த செயல்முறையில் பொதுவாக இருவர் இணைந்து பணியாற்றுவர். ஒருவர் வண்ணங்களை பூசுவதற்கும், மற்றொருவர் ஸ்கிரீனை இழுத்துக் கொடுப்பதற்கும் பொறுப்பேற்று, ஒற்றுமையாகச் செயல்பட்டு சேலையை அழகுபடுத்துவார்கள்.
விஞ்ஞான முறையில் தயாரிக்கப்படும் உயர் தரச் சாயங்கள் பயன்படுத்தப்படுவதால், வண்ணம் பூசப்பட்ட உடனே எளிதில் காய்ந்து விடுகிறது. இதனால் சேலைகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைகின்றன. அதன் பின் சேலைகள் வெயிலில் காயவைத்து, ‘ஸ்டார்ச்’ எனப்படும் கஞ்சிப் பசையால் பதப்படுத்தி, அயன் செய்து, மடித்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு இயந்திரத்தில் நெய்யப்பட்டு, உயர்தரச் சாயங்களால் பூசப்பட்ட சுங்குடி சேலைகள் மதுரை மற்றும் சின்னாளப்பட்டி போன்ற ஊர்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகின்றன.
மேலும் அனைத்து விதமான உயர்தர சுங்குடி சேலைகளையும் பிரபஞ்ச சுங்குடிஸ் நிறுவனத்தின் மூலம் பெறலாம்.
👉 அவர்களுடைய இணையதளம்: www.sungudi.com
உங்களுக்கு தேவையான சுங்குடி சேலைகளை எளிதில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.